அதர்வாவுக்கு ஜோடியான ஹன்சிஹா
Posted: Wed,06 Dec 2017 05:13:42 GMT
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பாக நடித்து வந்த ஹன்சிஹாவுக்கு சமீப காலமாக படங்கள் ஏதும் கைவசம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் உடல் எடையை குறைத்து, மெல்லிய தோற்றத்துக்கு மாறியுள்ளார் ஹன்சிஹா.
தற்போது பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்து வரும் ஹன்சிஹா, சாம் ஆண்டன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் அதர்வா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. சென்னை ஊட்டி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
  • Share
  • 0 Comment(s)