விஷால் சர்ச்சை: ஆர்.ஜே.பாலாஜி கருத்து
Posted: Wed,06 Dec 2017 05:13:16 GMT
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு நிராகரிக்கப்பட்டது அரசியல் மற்றும் திரையுலகம் ஆகியவற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களின் அறிக்கை, திரையுலகினரின் மாறு பட்ட பதிவுகள் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இப்பிரச்சினை.
இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், “விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட ஆர்.கே.நகரில் நேற்றிரவு நடந்தது பரிதாபகரமான சம்பவம். தேர்தல் ஆணையம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரமான அமைப்பு என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட வேண்டும். பல்வேறு ஊடகங்களும் பொத்தாம் பொதுவாக பல செய்திகளை வெளியிட்டுவருவது சரியானது அல்ல.” என்று பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)