விஜய் படத்தை மறுத்த ஓவியா: காரணம் என்ன!
Posted: Wed,06 Dec 2017 05:12:50 GMT
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு தற்காலிகமாக விஜய் 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நாயகியாக நடிப்பவர்கள் குறித்து நாள் தோறும் மாறுபட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நயன்தார நடிக்கிறார், சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நாயகி பாத்திரம் அல்லாத மற்றொரு சிறிய பாத்திரத்தில் நடிக்க ஓவியாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் அப்பாத்திரத்துக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அப்படத்தில் நடிக்க ஓவியா மறுத்துவிட்டராம்.
  • Share
  • 0 Comment(s)