ராகுல் காந்தியை தூக்கி பிடிக்கும் சிவசேனா
Posted: Wed,06 Dec 2017 04:52:38 GMT
பாஜகவின் நீண்டநாள் கூட்டாளியான சிவசேனா, தற்போது ராகுல் காந்தியை உயர்த்தி பேசிவருகிறது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் வெளியாகிஉள்ல கட்டுரையில், “பா.ஜனதாவால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிற குஜராத் தேர்தல், ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது. பிரதமர் மோடியை சோர்வடைய செய்துவிட்டது. ராகுல்காந்தி இனிமேல் ‘பப்பு’ இல்லை என்பதை தேர்தல்கள் நிரூபித்து காட்டிவிட்டன. பா.ஜனதா பெரிய மனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் காங்கிரசின் நிலைமை மோசமாக இருக்கிறது. பா.ஜனதா தனக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் மாயையை தகர்த்து, ராகுல்காந்தி அவருக்காக ஒரு பாதையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ராகுல்காந்தி கோவில்களுக்கு செல்வது இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)