நடுக்கத்தில் பாஜக
Posted: Wed,06 Dec 2017 04:50:54 GMT
கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்துவரும் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டிவிட்டார் ராகுல் காந்தி. மோடி தொடங்கி, பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் என அனைவரும் ராகுல் காந்தியை பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் குஜராத் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி வந்த பாஜக தலைவர்கள், தற்போது தங்களின் பழைய ஆயுதமான இந்துத்வாவை கையில் எடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, ” பாஜக எப்போதுமே இந்துத்துவா ஆதரவு கட்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஒரிஜினல் இருக்கும்போது, அதைப்போலவே க்ளோனிங் செய்யப்பட்டதை மக்கள் ஏன் ஏற்க வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரும் ராகுல் காந்தியை குறிவைத்தே அருண் ஜேட்லி இவ்வாறு பேசியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)