ஆர்.கே நகர் தேர்தல்: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
Posted: Wed,06 Dec 2017 04:50:18 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டண் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, “நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் யாரும் தலையிடவில்லை, வேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் அதைத் தான் இப்போதும் செய்துள்ளது.
அதிகவினர் யாரும் தேர்தல் ஆணைய விதிகளை மீறி செயல்படக் கூடாது. இந்திய நாடே ஆர்கே நகர் இடைத்தேர்தலை உற்றுநோக்கிப் பார்த்துக கொண்டிருக்கிறது. வலுவான இயக்கமான அதிமுக ஜெயலலிதா இல்லாத நிலையில் இன்று தேர்தலை சந்திக்கிறது” என்று தெரிவித்தார்
  • Share
  • 0 Comment(s)