ராமர் கோவில் கருத்தரங்கத்தை ரத்து செய்த பல்கலை கழகம்
Posted: Wed,06 Dec 2017 04:48:57 GMT
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயோத்தி ராம ஜென்ம பூமி தொடர்பான கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராமர் கோவில் ஏன் தேவை என்ற கருத்தரங்கில், சுப்ரமணியன் சாமி பேசுவதாக இருந்தது, ஆனால் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, இக்கருத்தரங்குக்கு அனுமதியளித்தால் சர்ச்சை ஏற்படும் என்ற காரணத்தால் பல்கலை கழக நிர்வாகம், இக்கருத்தரங்கை ரத்து செய்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சாமி, “எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. என்னுடைய கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அச்சமுடன் உள்ளது. என்னுடைய வாதத்தில் இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை எழுந்து உள்ளது. ராமர் கோவில் தொடர்பான என்னுடைய வாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது, எனவே அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)