புயல் பாதிப்பு இல்லை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Posted: Wed,06 Dec 2017 12:59:49 GMT
சென்னைக்கு புயல் பாதிப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வரும் டிசம்பர் 8 வரையிலான காலகட்டத்தில் இது வட வட மேற்கு திசையில் ஆந்திர கரையை நோக்கி நகரும். மீனவர்கள் தமிழகம் மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு தேதிகளில் வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஒரிரு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை ஆயக்குடியில் 7 செ.மீ., மழையும், ராஜபாளையம், தென்காசி,அறந்தாங்கியில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகயுள்ளது. லேசான மழை அடுத்த 2 நாட்கள் 6, 7 தேதி தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழை வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)