பாதகத்தை சாதகமாக மாற்றிய ராகுல் காந்தி
Posted: Wed,06 Dec 2017 12:57:35 GMT
குஜராத் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் நாள் தோறும் தனது ட்விட்டர் மூலம் பாஜக அரசுக்கு கேள்விகளை எழுப்பி வருகிறார் ராகுல் காந்தி, அதில் விலைவாசி தொடர்பான கேள்வி ஒன்றில் 'கடந்த, 2014ல், 414 ரூபாயாக இருந்த சமையல், 'காஸ்' விலை, தற்போது, 742 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 179 சதவீத உயர்வு' என்று பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில் 79 சதவீதம் என்பதற்கு பதிலாக, 179 சதவீதம் என்று தவறாக பதிவிட்டிருந்தார். இதை சில சுட்டி காட்டி இருந்தனர். உடனடியாக அப்பதிவை நீக்கிவிட்டு புதிய பதிவை இட்ட ராகுல் காந்தி, “எனது பா.ஜ., நண்பர்களுக்கு, நரேந்திர பாய் போல் அல்லாமல், நான் சாதாரண மனிதன். நாம் தவறு செய்வோம். அது தான் வாழ்க்கையை இன்னும் ஆர்வமானதாக்கும். தவறை சுட்டி காட்டியவர்களுக்கு நன்றி. வரும் நாட்களில் இதனை தொடருங்கள். அது உண்மையில் என்னை மேம்படுத்தி கொள்ள உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தன் தவறையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.
  • Share
  • 0 Comment(s)