ஞானவேல் ராஜா ராஜினாமா ஏன்?
Posted: Wed,06 Dec 2017 12:17:47 GMT
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் விஷால் போட்டி, அதற்கு சேரன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு, விஷாலின் மனு தள்ளுபடி, மீண்டும் ஏற்பு மீண்டும் தள்ளுபடி என்ற பல குழப்பங்களுக்கிடையே நேற்று தயாரிப்பாளார் சங்க செயலாலர் பதவியில் இருந்து ஞானவேல் ராஜா விலகியுள்ளார்.
விஷால் பிரச்சினை பரபரப்பாக சென்று கொண்டிருந்த போது ஞானவேல் ராஜா ராஜினாமா செய்ததால், விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்று முதலில் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல.
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வினியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ஞானவேல்ராஜா. விலகலுகான காரணம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)