ஏற்றுமதியாகும் ஜிகர்தண்டா
Posted: Wed,06 Dec 2017 12:17:17 GMT
2014ம் ஆண்டுகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய கிடைத்தது.
தற்போது இப்படம் பாலுவுட்டுக்கு ஏற்றுமதியாக உள்ளது. இப்படத்தின் இந்தி மறு ஆக்க ரிமையை பெற்றுள்ள அஜய் தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார். நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். சித்தார்த் வேடத்தில் பர்கான் அக்தரும், பாபி சிம்ஹா வேடத்தில் சஞ்சய் தத்தும் நடிக்கின்றனர். நாயகி பாத்திரத்தில், அதாவது லட்சுமி மேனன் நடித்த பாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருக்கிறார்.
  • Share
  • 0 Comment(s)