ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நெப்போலியன்
Posted: Wed,06 Dec 2017 12:16:34 GMT
புது நெல்லு புது நாத்து படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமனவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே, நாடோடி தென்றல், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் நாயகன், வில்லன், கௌரவ தோற்றம் என நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இந்தியா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ள இவர் தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆயினும் அவ்வப்போது நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கைபா பிலிம்ஸ் தயாரித்துள்ள 'டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்' என்ற ஹாலிவுட்டில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன் தயாரித்துள்ளார். இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெஸ்ஸி டீன், ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்
  • Share
  • 0 Comment(s)