புயலுக்கு வாய்ப்பில்லை
Posted: Tue,05 Dec 2017 05:39:11 GMT
அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி தமிழகம் மற்றும் அந்திராவை தாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், வெதர்மேன் இணையதளத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெதர்மேன் முகநூல் பதிவில், “வங்கக்கடலில் உள்ள சூழல் புயல் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது. இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகக் கூட வலுப்பெறலாம். ஆனால், புயலாக மாறுமா என்பதே சந்தேகம். அதுமட்டுமல்ல, நம் தமிழகத்துக்கு அருகே வருமா என்பது கூட சந்தேகம்தான்
வங்கக்கடலில் அதிகமாக உருவாகி இருக்கும் மேகக்கூட்டங்கள், மறு நாளே கலைந்துவிடலாம். ஆனால் எந்த மேகக்கூட்டமும் அவ்வளவு எளிதாக கலைந்துவிடாது.
மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிகுள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நம்முடைய இந்திய வானிலை மையம் புயல் குறித்த கண்ணோட்டத்தை, கணிப்பை இன்று அல்லது நாளை மாற்றிக்கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரிகளில் தமிழகத்துக்கு இந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால், அதிகமான மழை இல்லை என்பது தெரிந்துவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)