ஜெயலலிதாவுக்கு எடியூரப்பா நினைவஞ்சலி
Posted: Tue,05 Dec 2017 05:37:46 GMT
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தையும் தாண்டி இந்திய அளவில் புகழ் பெற்ற அரசியல் தலைவராக விளங்கினார். அவரின் முதலாமாண்டு நினைவுநாளான இன்று, ஜெயலலிதா குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டரில் நினைவு பதிவு இட்டுள்ளார்.
அப்பதிவில், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் அவரை நினைத்துப் பார்க்கிறேன்.
ஜெயலலிதாவின் தைரியம், நம்பிக்கை, துணிச்சலான நிர்வாகம் ஆகியவற்றைக் கண்டு எப்போதும் வியந்திருக்கிறேன். அவரின் இறப்புக்குப் பிறகு கடந்த ஓராண்டாக நடைபெறும் தமிழக அரசியல் நிகழ்வுகள், அவரைப் போன்ற தலைவரின் தேவையை நினைவுபடுத்துகின்றன'' என்று பதிவிட்டுள்ளார்
  • Share
  • 0 Comment(s)