வானிலை எச்சரிக்கை
Posted: Mon,04 Dec 2017 05:51:37 GMT
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மண்டல புயல் எச்சரிக்கை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றார்.
''டிசம்பர் 6-ம் தேதி வாக்கில் இது வடமேற்கு திசையில் வடதமிழகம், தெற்கு ஆந்திரக் கடற்கரைகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ள அவர், “அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)