”இந்தியாவை வீழ்த்த முடியாது”, லண்டன் மேயர் பேட்டி
Posted: Mon,04 Dec 2017 05:24:15 GMT
லண்டன் மாநகர தந்தை ஷாதிக் கான் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் செல்ல உள்ளார்.
இன்று டெல்லியில் செய்தி நிறுவத்துக்கு அவர் அளித்த பேட்ட்யில், “பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் அனைத்தும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன். பயங்கரவாதிகள் மனித இனத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை சமூகத்தில் இருந்து பிரிக்க முயல்கிறார்கள்.
இந்தியாவையோ, பிரிட்டனையோ பயங்கரவாதத்தால் வீழ்த்த முடியாது என்பது எனது கருத்து. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், பிரிட்டனும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பாக இருக்கும். எங்கள் நகரங்களை பாதுகாப்பாக வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என ஒருவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)