கோதுமை பணியாரம் (இனிப்பு)
Posted: Mon,04 Dec 2017 01:33:38 GMT
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 150 கிராம்
வெல்லம் – 150 கிராம்
வெள்ளை ரவை – 100 கிராம்
வாழைப்பழம் – 1
ஏலக்காய் பொடி – ஒரு தேனீர் கரண்டி
எண்ணை – தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு மற்றும் ரவையுடன் வெல்லத்தை பொடிசெய்து கலக்கவும், வாழைப்பழத்தை அந்த மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
வாணலியில் எண்னைவிட்டு, கெட்டியாக பிசைந்த கலவையை சிறு உருண்டைகளாக பொரிந்து எடுக்கவும். வாணலியில் எண்னைவிட்டு பொரிப்பதற்கு பதிலாக பனியாரக்கல்லில் வார்த்தும் எடுக்கலாம்.
பனியாரக்கல்லில் வார்த்து எடுக்கும் பட்சத்தில் கோதுமை மாவு கலவையில் சிறிது நீர் ஊற்றி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
  • Share
  • 0 Comment(s)