ரெய்னாவுக்கு தோனி பதிலடி
Posted: Thu,30 Nov 2017 12:33:20 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரிக்கெட் வீரர் ரெய்னா, “தோனி என்ன நினைக்கிறார், எண்ணுகிறார் என்பதைக் கணிப்பது கடினம், அவர் கண்கள் ஒன்றையும் வெளிப்படுத்தாது, நாம் சில வேளைகளில், ‘கொஞ்சம் உணர்ச்சியைத்தான் காட்டேன்’ என்று கூற வேண்டும் போல் தோன்றும். அவர் நிறைய முறை கோபமடைந்துள்ளார். ஆனால் கேமராவில் நீங்கள் பார்க்க முடியாது. கேமரா எப்போது ஆனில் இல்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.
ரெய்னாவின் இக்கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள தோனி, “நாம் மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆடுகளத்துக்குள் இறங்கிவிட்டால், அதில் நான் கவனமாக இருப்பேன். அங்கு நகைச்சுவையாக பேசமாட்டேன். ஆனால் டிரெஸ்சிங் அறையில் ஜாலியாக இருப்பேன். இதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)