”கடன் தள்ளுபடி இல்லை”, அருண் ஜெட்லி அறிவிப்பு
Posted: Thu,30 Nov 2017 12:30:52 GMT
தொழிலதிபர்களின் வாராக்கடன் தள்ளுபடி என்று வெளியான செய்திகளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூல வலைத்தள பதிவில், “தொழிலதிபர்களின் வாராக்கடன்களை, வங்கிகள் ரத்து செய்து உள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. வாராக்கடன் குறித்த உண்மை நிலையை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் பொறுப்பு, எங்களுக்கு ஏற்பட்டுஉள்ளது.
தற்போது, வாராக்கடனாகியுள்ள கடன்களை, 2008 முதல், 2014 வரை யார் சொல்லி வழங் கினர் என,மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தற்போது புரளியை பரப்பும் நபர்களிடம், யாருடைய நெருக்கடியால் இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன என, கேளுங்கள்.பொதுதுறை வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக் காதவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர்களிடம் கேள்விஎழுப்புங்கள்.
அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாராக்கடனாக மாறாமல் இருப்பதற்காக, அந்தக் கடன்களை வகைப்படுத்தும் விதிகளை மாற்றி ஏமாற்றியுள்ளனர். மத்தியில், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், கடன் வாங்கியவர்களின், ஏ.க்யூ.ஆர்., எனப்படும், சொத்து தர ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அதன்படி, 4.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை, உண்மையில், வாராக்கடன்களாக அறிவித்திருக்க வேண்டும்; ஆனால், மூடி மறைக்க பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.மத்திய அரசு இந்த வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய வில்லை.
கடன்களைவசூலிப்பதற்காக, திவால் சட்டத்தைப் பயன் படுத்தி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாறு, 12 முக்கிய கடன் ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து, 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் வசூலிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நியாயமானவர்களுக்கு கடன் கிடைக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுத்து உள்ளது. மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், முந்தைய ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட வாராக்கடன்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு, அவற்றை வசூலிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளன.
இது தவிர, வங்கிகளின் நிதி நிலைமை வலுப் படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. வங்கிக் கடன் முறைகளில் இருந்து வந்த குளறுபடிகள் அகற்றப்பட்டு, அவை வலுவாக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)