அஸ்வினை பாராட்டும் முரளீதரன்
Posted: Thu,30 Nov 2017 12:30:15 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் அஸ்வினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன் பாராட்டியுள்ளார்.
அஸ்வின் பந்து வீட்ச்சர் பாராட்டியுள்ள அவர், “இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் குறைந்த போட்டியில் 300 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியதற்கு பாராட்டுக்கள். இந்த இலக்கை எட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இப்போதைய நிலையில், கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த சுழல் வீரர் அஷ்வின் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
தற்போதைக்கு, அஷ்வின் ஒரு நாள் அணியில் இடம்பெறவில்லை. விரைவில் இவ்வித கிரிக்கெட்டிலும் சாதனை நிகழ்த்துவார் என நம்புகிறேன். டெஸ்டில் 400 முதல் 800 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தி உள்ளேன். இதை அஷ்வின் முறியடிப்பாரா என கேள்வி எழுப்புகின்றனர். இவருக்கு தற்போதுதான் 31 வயதாகிறது. இன்னும் 5 ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக, 35 வயதுக்கு மேல் அசத்துவது கடினம். தவிர, காயம் தொல்லை தராமல் இருக்க வேண்டும். அஷ்வின், எனது சாதனையை முறியடிப்பாரா, இல்லையா என்பதை இதுபோன்ற பல விஷயங்கள் தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)