தோல்விக்கு காரணம் கூறும் இலங்கை அணித்தலைவர்
Posted: Wed,29 Nov 2017 05:25:16 GMT
இந்தியாவில் சுற்றுபயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம், ட்ராவில் முடிந்த நிலையில், நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியை தோற்கடித்துள்ளது.
இத்தோல்வி குறித்து பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சன்டிமால், “டாஸ் வென்றது நல்ல விஷயமாகும். எதிர்பாராதவிதமாக முதல் நாளில் இருந்தே நாங்கள் எல்லா வகையிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டோம். எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை. இந்தியா போன்ற அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் வெற்றி பெறுவது குறித்தோ? 5 நாட்களும் களத்தில் நிற்பது பற்றியோ? சிந்திக்க முடியும். மேத்யூஸ் போன்ற சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)