அதிரடி தொடரும்: விராட் கோஹ்லி பேச்சு
Posted: Wed,29 Nov 2017 05:15:16 GMT
நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, “நான் தற்போது பேட்டிங் செய்யும் பாணியிலேயே ஜனவரி மாதத்தில் தொடங்கும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் விளையாட விரும்புகிறேன். நல்ல நிலைக்கு வந்து விட்டு வேகமாக அடித்து ரன்களை சேர்ப்பது தான் எனது நோக்கமாகும்.
வேகமாக அதிக ரன் சேர்க்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்கள் எதிரணியை மடக்குவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும். தென்ஆப்பிரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்களிலும் இதுபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் நாங்கள் பின்பற்றபோகிறோம். பெரிய சதத்தை அடிக்கவே நான் விரும்புகிறேன். அது அணிக்கு பலன் அளிக்கும். சதம் அடித்த பிறகு கவனத்தை இழந்தால் விரைவில் விக்கெட்டை இழக்க நேரிடும். நிலைத்து நின்று விட்ட பேட்ஸ்மேன், புதிய பேட்ஸ்மேன் போல் அல்லாமல் வேகமாக அடித்து ஆட முடியும். எனது உடல் தகுதி நீண்ட நேரம் பேட்டிங் செய்ய உதவிகரமாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)