காசோலை ஒழிப்பா?
Posted: Thu,23 Nov 2017 05:03:53 GMT
500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிந்தது போல் காசோலை முறையையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால், “வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் காசோலைகளை மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும்” என்றும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்
ஆனால் இத்தகவல்களை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. ”வங்கி காசோலை நடைமுறையை திரும்ப பெறும் வகையில் எந்தஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு உறுதிசெய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)