Posted: Thu,23 Nov 2017 04:25:30 GMT
இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. விமானம், கப்பல், நீர்மூழ்கி கப்பல், தரை என பல்வேறு தளங்களில் இருந்து ஏவப்படும் திறனுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
2.5 டன் எடையுள்ள இந்த ஏவுகணை, 290 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வலிமை உடையது. ஏற்கனவே, ராணுவம் மற்றும் கடற்படையில், பிரம்மோஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இது குறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “விமானப் படையின் சுகோய் 30 - எம்.கே.1 போர் விமானத்தில் இருந்து, பிரம்மோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது. வங்ககடலில் இருந்த இலக்கை, தொடர்ந்து, விமானப் படையின் பலம் அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this