மோடி அரசுக்கு சான்றளித்த மூடி
Posted: Fri,17 Nov 2017 11:51:32 GMT
சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சான்றளித்துள்ளது குறித்து கருத்து தெரிவ்வித்துள்ள பொருளாதார நிபுணர் சேகர், “சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ், இந்தியாவில் ஜிஎஸ்டி உட்பட பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் தற்போது சீரான வளர்ச்சியை எட்டும், நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி நிறுவனங்களின் வளர்ச்சியும் 30 முதல் 35 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மக்களின் கடன் விகிதம் உயர் அளவில் இருந்து சராசரி அளவை நோக்கி நகரும். இதன் காரணமாக 2018- 2019 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
மூடி’ஸ் தரமதிப்பீடு உலக அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகளை மதிப்பிட்டது சரியாக அமைந்தது. எனவே, இந்தமுறையும் அதன் மதிப்பீடு சரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மூடி’ஸ்
  • Share
  • 0 Comment(s)