” மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன”, சிங்கப்பூரில் அருண் ஜேட்லி பேச்சு
Posted: Thu,16 Nov 2017 02:26:31 GMT
சிங்கப்பூரில் நடைபெற்ற நிதி மற்றும் தொழிழ் நுட்ப விழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “சுலபமாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஒரே ஆண்டில், 30 நிலைகளை கடந்து, 100-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நிதிச் சேவைகளில், 'ஆதார்' இணைக்கப்பட்டு, அனைத்து செயல்பாடுகளும், 'டிஜிட்டல்' மயமாகி வருகின்றன. இதனால், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன.
நிதிச் சேவைகளின் பரவலாக்கமும், அதிகரித்து வரும் மின்னணு பரிவர்த்தனைகளும், சுலபமாக தொழில் துவங்க ஏற்ற இடமாக, இந்தியாவை உயர்த்தி உள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் போன்ற சீர்திருத்த திட்டங்களால், குறுகிய கால சவால்களை சந்திக்க நேரிட்டுள்ளது. ஆனால், நடுத்தர மற்றும் நீண்டகால அளவில், இந்த நடவடிக்கைகளால், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, மிகப்பெரிய பயன்கள் கிடைக்கும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. சுலபமாக தொழில் புரிய ஏற்ற நாடாக, இந்தியா உருவெடுத்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)