ஜிஎஸ்டி குறைப்பு
Posted: Fri,10 Nov 2017 05:13:06 GMT
இன்று கௌகாத்தியிஉல் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி சதவீதம் குறைக்கப்படுவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, “178 வகையான பொருட்கள், 28 சதவீத வரி விதிப்பிலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது, இந்த உத்தரவு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. 13 பொருட்கள் மீது இதற்கு முன்பு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு இருந்த நிலையில், அது 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 வகை பொருட்கள் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதமாக இருந்த 6 வகை பொருட்களுக்கு வரி கிடையாது” என்று தெரிவித்தார்.
மேலும், “28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாற்றப்பட்ட பொருட்களில் டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் அடங்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)