பங்குச்சந்தையில் ஏற்றம்
Posted: Thu,09 Nov 2017 05:59:35 GMT
நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தை இன்று காலையில் உயர்வுடன் தொடங்கியது. பிற்பகலில் சற்றே தடுமாற்றம் காணப்பட்டாலும் இன்றைய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்து.
பல பெரிய நிறுவனங்கள் தங்களுடைய முதல் காலாண்டு நிகரலாபம் உயர்ந்திருப்பதாக அறிவித்தன. அதன் காரணமாக பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 13.92 சதவீதம் அதிகரித்து, ரூ.18.98 கோடிகள் லாபம் ஈட்டி உள்ளன. இதே போன்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது முதல் காலாண்டு நிகரலாபம் 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் விளைவாக இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 32.12 புள்ளிகள் உயர்ந்து 33,250.93 புள்ளிகளாகவும், நிப்டி 5.80 புள்ளிகள் உயர்ந்து 10,309 புள்ளிகளாகவும் உள்ளன.
  • Share
  • 0 Comment(s)