பாஜக தலைவர்கள் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விசமிகள்
Posted: Mon,23 Oct 2017 02:00:17 GMT
இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில், தமிழக பாஜக தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்து, சில விசமிகள் மாற்றங்களை செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை பொரி உருண்டை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை டுமிழிசை என்றும் மாற்றியுள்ளனர். இது தெரிந்து சில மணித்துளிகளில் விக்கிபீடியா நிர்வாகம் அதை மாற்றிவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க தலைமை நூலகத்தின் நிர்வாகியும் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி, “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரைச் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)