”தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்”, தினகரன் பேட்டி
Posted: Mon,23 Oct 2017 01:59:43 GMT
இரண்டாக பிரிந்து கிடைக்கும் அதிமுகவில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இரட்டை இலை விவகாரத்தில் இன்று இறுதி தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை. எப்படியும் எங்களுக்கு சாதமாகத் தான் தீர்ப்பு வரும். வயிற்று பிழைப்புக்காக தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது சரியாகவே உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா தான் காரணம் என பொய் புகார் கூறப்பட்டது. தற்போது அது உண்மையல்ல என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. எந்த பொய்யும் நீண்ட நாட்களுக்கு நிற்காது. முதல்வர், அமைச்சர்கள் மேலே உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற பயத்தில் உள்ளனர்.
எடப்பாடி அண்ட் கோவின் ஒரு கம்பெனி போல அரசு நடக்கிறது. இரட்டை இலை அவர்களிடம் சென்றால், இரட்டை இலை செத்து விடும். அதை நாங்கள் தான் மீட்க வேண்டி இருக்கும். தேர்தல் கமிஷன் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினாலும், சுப்ரீம் கோர்ட் செல்வோம். ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)