ஆர்.கே நகர் தேர்தலுக்கு தடை போடும் ஸ்டாலின்
Posted: Mon,23 Oct 2017 01:59:07 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை உடனடியாக நடத்தக்கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை, கொளத்துாரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழகம் முழுவதும், 4.78 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் கமிஷனர், லக்கானி கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை, தி.மு.க., ஆதாரங்களுடன் புகார் அளித்தும், நீக்கப்பட வில்லை. அவர்களை நீக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு, வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த விவகாரமே காரணம்.
இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களில், முதல்வர், அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை கூட, பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு, பின் தேர்தலை நடத்த வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)