தமிழிசைக்கு தொலைபேசியில் மிரட்டல்
Posted: Mon,23 Oct 2017 01:58:15 GMT
மெர்சல் படம் குறித்த எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்த்தால், தனக்கு தொலைபேசியில் மிரட்டல் வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன். தவறாக பதிவு செய்யவில்லை. ஜனநாயகத்தில் எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து சொல்ல உரிமை உண்டு. இதனை எதிர்கொள்வதற்கென உரிய வழியைத்தான் பின்பற்ற வேண்டும். தவறான புரிந்துணர்வு இருந்ததால் தான் கருத்து தெரிவித்தேன். ஆனால் அவர் அவருக்கு வேண்டியவர், இவருக்கு வேண்டியவர் என அரசியல் செய்கின்றனர்.
நேற்று இரவு முதல் அதிகாலை 4 மணி வரை போன் மூலம் மிரட்டல் அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தன. படுமோசமாக திட்டினர். திட்டுவது, கடும்விமர்சனம் வைப்பது, இணையதளங்களில் விமர்சிப்பது சரியான முறையல்ல. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாரா உள்ளேன். ” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)