மெர்சல் சர்ச்சை: மயில்சாமியின் கிண்டல்
Posted: Mon,23 Oct 2017 10:43:34 GMT
மெர்சல் சர்ச்சை குறித்த தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ”ஒவ்வொரு பெரிய படத்திற்கும் பப்ளிசிட்டிக்கு மட்டும் ரூ. 2 கோடி பட்ஜெட். எனக்கு தெரிந்து திரையுலகத்தில் இந்தியா முழுவதும் மெர்சலுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டி யாருமே பண்ண முடியாது. அந்த காட்சிகள் எப்பொழுது வெட்டப்பட்டதோ அது வாட்ஸ்ஆப்பில் பறக்கிறது.
இத்தனை படங்களில் இல்லாத அளவுக்கு விஜய் இந்த படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். இதற்காக மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த சிலருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு மட்டும் இல்லை ஒவ்வொரு படத்திற்கும் இதே மாதிரி பப்ளிசிட்டி செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு படத்தை பார்த்து இதை தூக்கு, இதை வைக்காத என்று சொன்னீர்கள் என்றால் தேனாண்டாள் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருக்கோ அதே போன்று அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். மத்திய அரசே, மாநில அரசே ஒவ்வொரு படத்திற்கும் நீங்களே விமர்சனம் பண்ணுங்க, எந்த தயாரிப்பாளரும் டிவியில் விளம்பரம் பண்ணத் தேவையில்லை ” என்று தனக்குறிய பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)