பிரபாஸ் பட முதல் பார்வை வெளியீடு
Posted: Mon,23 Oct 2017 10:42:57 GMT
பாகுபலி படத்துக்குப்பின் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் சாஹோ. அதிரடி ஆக்சன் மற்றும் க்ரைம் கதையாக தயாராகிவரும் இப்படத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.
பிரபாஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் நடிக்கிறார். சுஜீத் இயக்குகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு பனி மூடிய சாலையில் தனியாக பிரபாஸ் நடந்து வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நீளமான கோட் அணிந்துள்ள பிரபாஸ், துணியால் முகத்தை மூடியபடி இருக்கிறார். பின்னணியில் வானுயர்ந்த கட்டிடங்கள் இருக்கின்றன. முதல் பார்வையை பார்க்கும் போது, வெளிநாட்டில் கதை நடப்பது போல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
  • Share
  • 0 Comment(s)