2.0 படத்துக்கு பூசணிக்காய் உடைக்கப்பட்டது
Posted: Mon,23 Oct 2017 10:42:27 GMT
ஒரு படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்த நிலையில் பூசணிக்காய் உடைக்கப்படுவது தமிழ் திரையுலகின் வழக்கம். அதன்படி சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து நேற்று பூசணிக்காய் உடைக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் இறுதிபடப்பிடிப்பு முடிந்து, பூசணிக்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டணர்.
லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில், தயாரித்து வரும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி துபாயில் இப்படத்தில் இசைவெளியீடு நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
  • Share
  • 0 Comment(s)