விஜய்யின் பெயர் குறித்த சர்ச்சைக்கு சந்திரசேகர் பதில்
Posted: Mon,23 Oct 2017 10:41:58 GMT
மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களை குறித்து எழுந்துள்ள சர்ச்சையில், பாஜக தலைவர் ஹெச்.ராஜா, நடிகர் விஜய்யை ஜோசஃப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள விஜய்யின் அப்பா சந்திரசேகர், “விஜய்யை பள்ளியில் சேர்த்த போது 'பெயர் - ஜோசப் விஜய். தந்தை பெயர் - சந்திரசேகர். தேசம் - இந்தியா. மதம் - இந்தியன், ஜாதி - இந்தியன்' என்றுதான் போட்டேன். இன்றுவரை விஜய் ஒரு மனிதனாக இருக்கிறார். பெயரை வைத்து ஒருவரது மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் இந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)