”ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்”, பார்திபன் கருத்து
Posted: Sun,22 Oct 2017 04:37:07 GMT
மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்திருப்பது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்திபன்.
“கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக- மெர்சல் காணவில்லை முட்டி மோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ? வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!”
”மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்களுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்-அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..!”
”நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும் அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!”
என்று தனக்குறிய பாணியில் பதிவுகளை இட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)