கோவிலை கேவிலாக்கிய ஹெச்.ராஜா
Posted: Sat,21 Oct 2017 05:45:33 GMT
மெர்சல் பிரச்சினை குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பாஜக கோருகிறது. பராசக்தி படம் தற்போது வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.
சிதம்பரத்தின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட ஹெச்.ராஜா, “திரு.ப.சி. அவர்களே இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று மக்கள் அரசை கேவிலிலிருந்து வெளியேறறுவர்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிக படபடப்பு காரணமாக, கோவிலிலிருந்து என்பதை கேவிலிலிருந்து என்று தவறாக பதிவிட்டு விட்டார் போலும்
  • Share
  • 0 Comment(s)