வைஃபை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
Posted: Fri,20 Oct 2017 03:45:30 GMT
கைபேசிகளில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக, பொது இடங்களில் இணையம் பயன்படுத்துவதற்கான இலவச இணையதள சேவையான வைஃபை கொடுப்பதும் அதிகரித்துள்ளது.
உணவு விடுதிகள், பேருந்து நிலையங்கள் என பல இடங்களில் தனியார் மற்றும் அரசால் இலவச வைஃபை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த இலவச வைஃபை பயன்படுத்துவதால் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது என மத்திய அரசின் இந்திய கணிப்பொறி அவசர கால மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொது இடங்களில் பயன்படுத்தப்படும் ‛வைபை' களில் சைபர் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொபைல் போனில் வைக்கப்பட்டிருக்கும் கிரடிட், டெபிட் கார்டு விவரங்கள், கடவுச்சொல், குறுஞ்செய்திகள், இமெயில் போன்ற தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. இதனால், பொது மக்கள் எந்த சூழ்நிலையிலும் பொது இடங்களில் ‛வைபை' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதில், வயர் இணைப்புகள் , விபிஎன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)