மொக்கை வாங்கிய கிரண்பேடி
Posted: Fri,20 Oct 2017 01:56:46 GMT
வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் புனைவு செய்திகளை உயர் பொறுப்பில் இருப்பவர்களும், ஊடகங்களும் எந்த விசாரணையும் இன்றி அப்படியே நம்புகிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் மோடியின் தாயார் தீபாவளிக்கு நடனம் ஆடினார் என்று வெளியான காணொளி.
ஒரு வயதான மூதாட்டி நடனம் ஆடுவது போல் வெளியான காணொளியை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள, புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடி, “இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். இந்த முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார்” என்று பதிவும் இட்டுள்ளார்.
கிரண் பேடியின்பதிவை பல முன்னணி பத்திரிக்கைகளும் செய்தியாக்கி மோடியின் தாயார் நடனம் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் அது மோடியின் தாயார் அல்ல, அதே போல் அது தீபாவளியன்று வெளியான காணொளியும் அல்ல. சில வாரங்களுகு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி அது. யாரோ ஒருவர் அது மோடியின் தாயார் என்று கதைகட்டி விட, ஆளுனர் முதல் முன்னணி பத்திரிக்கைகள் வரை அது குறித்து விசாரிக்காமல் செய்திகள் வெளியிட்டு அவமானப்பட்டுள்ளனர்.
  • Share
  • 0 Comment(s)