காலா: தன் பகுதியை முடித்தார் ரஜினி
Posted: Fri,13 Oct 2017 01:21:23 GMT
கபாலி படத்தையடுத்து இரண்டாவது முறையாக ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் காலா. இப்படத்தில் ரஜினி மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹியூமா குரோஷி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், சமுத்திரகனி, சுகன்யா, சம்பத் ராஜ், ஈஸ்வரி ராவ், பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இதில், ரஜினி தன்னுடைய பகுதி முழுவதையும் நடித்து முடித்துள்ளாராம். ஒரெ ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்த நிலையில் அப்பாடல் காட்சியின் படப்பிடிப்பில் தற்போது ரஜினி நடித்து வருகிறார்.
இப்பாடல் காட்சியுடன் ரஜினியின் ஒட்டு மொத்த பகுதிகளின் படப்பிடிப்பும் முடிவடைகிறது. இப்படம் அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என காலா பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • Share
  • 0 Comment(s)