விஜய் ரசிகர்கள் அதிருப்தி
Posted: Fri,13 Oct 2017 01:20:18 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் மெர்சல். இப்படம் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 120 கோடி செலவில் தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்னோட்டம் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், முன்னோட்டம் வெளியிடும் யோசனை இல்லை என்று அட்லி தெரிவித்த்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)