காளையுடன் மோதும் மான்
Posted: Fri,13 Oct 2017 01:16:53 GMT
வரும் தீபாவளியன்று விஜய்யின் மெர்சல் மற்றும் சசிகுமாரின் கொடிவீரன் ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கார்திக் சுப்பராஜ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் தயாராகியுள்ளா மேயாத மான் படமும் வெளியாக உள்ளது.
இது குறித்து கார்திக் சுப்பராஜ், தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கை விளம்பர போஸ்டரில், “மெர்சலான காளை வருதுங்க! கூடவே... துள்ளி மானும் வருதுங்க!” என்ற வரிகளுடன் விளம்பரம் செய்துள்ளனர்.
இப்படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார், தொலைகாட்சி பிரபலம் பிரியா பவானி சங்கர் இப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார்.
  • Share
  • 0 Comment(s)