விஷாலின் ஆறு கட்டளைகள்
Posted: Fri,13 Oct 2017 01:16:19 GMT
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என தமிழ் திரையுலகை வரி போட்டு வதைத்துக்கொண்டுருக்கிறது அரசு. இந்நிலையில் திரையரங்க கட்டணத்தையும் உயர்த்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் திரையரங்கங்களுக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆறு கட்டளைகள் இட்டுள்ளார். அவையாவன
அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்
தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையில்தான் விற்கப்பட வேண்டும்
கேன்டீன்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கப்பட வேண்டும்
வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்
பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
இவ்விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் அளிக்கலாம். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும். என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)