அஜீத்துடன் பணிபுரிய ஆசைப்படும் இசையமைப்பாளர்
Posted: Fri,13 Oct 2017 01:15:24 GMT
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் முதல் குறிக்கோள் எப்படியாவது அஜீத் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதே. அதே போல் பல நடிகர்களுக்கும் அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது.
பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வந்த அருண் விஜய், அஜீத்துடன் ‘என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல், இசையமைப்பாளர்களும் அஜீத்துடன் ஒரு படத்திலாவது பணிபுரிந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என பரபரப்பான இசையமைப்பாளரக வலம் வரும் தமன், தன்னுடைய ட்விட்டரில், “இசையமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)