ஆர்கே நகர் இடைத்தேர்தல் எப்போது?
Posted: Fri,13 Oct 2017 09:40:59 GMT
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாகியுள்ள ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் பணம் விளையாடிய காரணத்தால், இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து தெரிவித்துள்ளா தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, “டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அச்சமயத்தில் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்திவிடுவது என்ற முடிவில் இருக்கிறதாம் தேர்தல் ஆணையம்.
  • Share
  • 0 Comment(s)