டெங்கு: மத்திய குழு சென்னையில் ஆலோசனை
Posted: Fri,13 Oct 2017 09:40:21 GMT
தமிழகத்தில் பெருகிவரும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியகுழு, சென்னை வந்துள்ளது. தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் மத்தியக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவை சேர்ந்த அஸ்தோஷ் பிஸ்வால், ”கேரளா போன்ற மாநிலங்களிலும் டெங்கு உள்ளது. தண்ணீரை தேக்கி வைக்கும் பழக்கமே டெங்கு கொசுக்கள் உருவாக காரணம். கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணம். டெங்கு நோய் பாதிப்பை சரி செய்யவே வந்துள்ளோம். டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வும், பழக்க வழக்கங்களை மாற்றும் தன்னையும் வர வேண்டும். டெங்கு பாதிப்புக்கு முழுவதுமாக அரசை குற்றம் கூற முடியாது. தண்ணீர் தேங்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவது முக்கியமானது.
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு ஒழிப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும். டெங்கு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. டெங்கு பரவ காரணமான நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அகற்றினாலே டெங்குவை ஒழிக்க முடியும். தேவைப்பட்டால் மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)