”அக்டோபர் 15ம் தேதி புயல் உருவாகும்”, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Posted: Fri,13 Oct 2017 09:38:47 GMT
தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்துள்ள நிலையில், வடமேற்கு பருவ மழை தொடங்கவிருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல்கள் உருவாகாத நிலையில், வடகிழக்கு பருவமழையின் போது புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆவ்யுமைய இயக்குனர் பாலச்சந்திரன், “அக்டோபர் 15-ம் தேதிவாக்கில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. அதுசம்பந்தமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகே, தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து கணிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)