”நிலவேம்பு குடிநீர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் டெங்குவை குணப்படுத்தாது” அன்புமணி அறிக்கை
Posted: Fri,13 Oct 2017 09:38:15 GMT
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போதைக்கு நிலவேம்பு குடிநீரே டெங்கு நோய்க்கு மருத்தாக எண்ணி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “நிலவேம்பு கசாயத்தால் எதிர்ப்பு சக்திதான் கூடுமே தவிர டெங்கு காய்ச்சல் குணமாகாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்.லை டெங்குவே தமிழகத்தில் இல்லை என மூடி மறைத்தது அரசு செய்த தவறு. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சையளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)