செல்லூர் ராஜுவுக்கு நோபல் பரிசு வழங்க ராமதாஸ் கோரிக்கை
Posted: Fri,13 Oct 2017 08:08:44 GMT
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க, தெர்மோகோல் அட்டைகளை அணையில் மிதக்கவிட்டு சாதனை படைத்த அமைச்சர் செல்லுர் ராஜு அவர்கள் டெங்கு ஒழிப்புக்கும் மிகச்சிறந்த வழி ஒன்றை கண்டறிந்துள்ளார்.
“வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது” என்று தெரிவித்து மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்துள்ளார் செல்லூர் ராஜு.
செல்லூர் ராஜுவின் இந்த அறிவுரைக்கு பதில் கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)